StartupTN, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் புத்தொழில் கலம் இணைந்து, தூத்துக்குடி நகரில் ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளன. இந்த நிகழ்வில் ஸ்டார்ட்அப்புகள், படித்த இளைஞர்கள், மற்றும் தொழில் தொடங்க விரும்பும் ஆசையுள்ளோர் ஒன்றுகூடி சந்திக்கிறார்கள்.
Rising Thoothukudi என்பது மாண்புமிகு பாராளுமன்றம உறுப்பினர் திருமதி. கனிமொழி கருணாநிதி அவர்களின் முன்னெடுப்பாக நடைபெறுகிறது.
இந்த முயற்சியின் மூலம், இளைஞர்களுக்குத் தேவையான
✅ மென்மையான திறன்கள் (Soft Skills)
✅ தொழில்முனைவு விழிப்புணர்வு
✅ வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்கள்
போன்ற முக்கியமான பழக்கங்களை வழங்குவது முக்கிய நோக்கமாகும்.
🎯 யார் சேரலாம்?
🔹 ஸ்டார்ட்அப்புகள் – வழிகாட்டியாக செயல்பட்டு திறன் பயிற்சி வழங்க அழைக்கப்படுகிறார்கள்
🔹 படித்த இளைஞர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர் – நிகழ்வில் பங்கேற்று நிபுணர்களிடமிருந்து பயனுள்ளதாக கற்றுக் கொள்ளலாம்
📅 நாள்: 13 ஜூலை 2025 📍 இடம்: தூத்துக்குடி (நிகழ்விட முகவரி விரைவில் அறிவிக்கப்படும்)
இது தூத்துக்குடி நகரத்தில் ஒரு புதிய ஒளிக்கீற்றை உருவாக்கும் நிகழ்வு!தமிமொழியில் தொழில்முனைவோருக்கான புதிய எழுச்சிக்கு அரங்கேற்றம் இது!
🔗 பதிவிற்கு:
For Startups: form.startuptn.in/STPSR
For Graduates / Start Steps: form.startuptn.in/STPGS