Saturday, July 12, 2025
spot_img
HomeNewsStartup News Tamil இணையதளத்தின் வெற்றிகரமான தொடக்கம்!

Startup News Tamil இணையதளத்தின் வெற்றிகரமான தொடக்கம்!

எங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் – www.startupnewstamil.com
நேற்று மிகச் சிறப்பாக, உள்ளடக்கமும் உணர்வும் நிறைந்த நிகழ்வுடன் தொடங்கப்பட்டது.

இந்த தளம் தமிழில் மட்டுமே இயங்கும் முதல் ஸ்டார்ட்அப் செய்திகள் மற்றும் தகவல் மேடையாக உருவாக்கப்பட்டுள்ளது — புதிய முயற்சிகள், தோல்வி கதைகள், வெற்றிக்கான பாதைகள், மற்றும் ஸ்டார்ட்அப் உலகை புரிந்துகொள்ள ஒரு புது வாசல் இது.

நினைவில் நிலைக்கும் நிகழ்வு – நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திரு. சி. கே. குமரவேல் (இயக்குநர், Naturals) மற்றும் திரு. சிவராஜா ராமநாதன் (தலைமை இயக்குநர், StartupTN) பங்கேற்றனர். அத்துடன், திருமதி அகிலா ராஜேஷ்வர் (இயக்குநர், TiE Chennai) சிறப்பான பார்வையுடன் மேடை பகிர்ந்தார்.

இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் அனுபவமும், எண்ணங்களும், எழுச்சியும் நிகழ்வுக்கு வலு சேர்த்தது.

எதிர்காலக் கனவுகள் – நமது நிறுவனர் திரு. ப. உமாசங்கரன் அவர்கள் நிகழ்வின் முடிவில் கூறிய வரிகள் அனைவரின் உள்ளங்களிலும் பதியவைத்தது:

“ஒரு நாளில் பேனா பிடிப்பது ஒரு வரலாறாக மாறும்.”

இன்று நாம் எழுத்திலிருந்து காணொளிக்கு, பார்ப்பவர்களிலிருந்து பங்கேற்பவர்களாக மாறும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். Startup News Tamil, இந்த மாற்றத்தில் தகவலுக்கும், தாக்கத்திற்கும் இடையிலான பாலமாக செயல்படும் என்பது எங்கள் நோக்கம்.

வெறும் இணையதளம் அல்ல — ஒரு ஊக்கமளிக்கும் இயக்கம்.
தொழில்முனைவர்கள் என்பவர்கள் சாதனைகள் மட்டும் படைக்கக்கூடாது,
அவர்கள் தளங்களையும் கட்ட வேண்டும் — மொழி பேசும், மக்களை இணைக்கும்.

ஸ்டார்ட்அப் நியூஸ் தமிழ் – சேனல், உங்களுக்காக தமிழில் செய்திகள் மட்டும் வழங்குவது மட்டும் அல்லாமல்

  1. Startup Journey – ஸ்டார்ட்அப் பயணக் கதைகள் (Startup Journey Part – 1 Link: https://youtu.be/6EWguHCgDgw?si=ahWSUJDn1J-nwgMc)
  2. Incubation Oru Paarvai – இன்க்யூபேஷன் மையங்கள் பார்வை
  3. Kalloori Kanavugal – மாணவர்களின் ஸ்டார்ட்அப் கனவுகள்
  4. Founders Talk – நிறுவனர்களுடன் நேர்காணல்கள்
  5. Behind The Pitch – முதலீட்டாளர்களின் பார்வை மற்றும் வாய்ப்புகள்
  6. LIVE Coverage – நிகழ்வு நேர ஒளிபரப்புகள்

போன்ற பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறோம்.

இந்த இணையதள ஆரம்பம், அந்தக் களத்தின் முதல் கட்டமே!
எங்களுடன் பயணியுங்கள் — மேலும் கதைகள், மேலும் புரிதல்கள், மேலும் தமிழ் தொழில்முனைவர் சக்தி உங்களுக்காக காத்திருக்கிறது!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments